
- திடீரென குலுங்கிய பூமி.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதி.. ரிக்டரில் 3.8 ஆக பதிவுon March 23, 2023 at 2:56 pm
இம்பால்: மணிப்பூர் மாநிலம் மொய்ராங்க் பகுதியில் இன்று திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு டெல்லி, உத்தர பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று மணிப்பூரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. துருக்கி, சிரியாவில் கடந்த மாதம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 50
- ச்சீ.. சொகுசு வாழ்க்கைக்காக இப்படியா? இன்ஸ்ட்டா பிரபலத்தை தூக்கிய போலீஸ்.. என்னாச்சு? யார் இவர்?on March 23, 2023 at 2:04 pm
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் வீடு புகுந்து நகை, பணத்தை திருடிய வழக்கில் இன்ஸ்ட்டாகிராம் பிரபலமான இளம்பெண் ஒருவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். வீட்டில் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்ய ரீல்ஸ் எடுத்து கொண்டிருந்தபோது அவர் போலீசில் சிக்கினார். அவரிடம் போலீஸ் விசாரணை நடத்திய நிலையில் திருட்டு தொடர்பாக அவர் கூறிய காரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில்
- மாமல்லபுரம் அருகே விபத்து.. ஸ்பாட்டில் தோழி இறப்பு.. வழக்கில் ஆஜராகாத யாஷிகா ஆனந்திற்கு பிடிவாரண்ட்on March 23, 2023 at 2:00 pm
செங்கல்பட்டு: மாமல்லபுரத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த விபத்து தொடர்பான வழக்கில் ஆஜராக பல முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் நடிகை யாஷிகா ஆனந்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருட்டு அறையில் முரட்டுக்குத்து, நோட்டா, ஜாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ்
- ஆஸ்கரை கையில் ஏந்திய அந்த தருணம்.. குழந்தை போல் சிரித்து மகிழ்ந்த பெல்லி- பொம்மன்.. ஷேராகும் போட்டோon March 23, 2023 at 1:40 pm
ஊட்டி: ஆஸ்கர் விருதை கையில் ஏந்தியபடி முதுமலை காப்பகத்தின் யானை பராமரிப்பாளர்கள் பெல்லி- பொம்மன் தம்பதி புகைப்படம் அதிகமாக ஷேர் ஆகி வருகிறது. முதுமலை பகுதியில் தெப்பக்காடு யானைகள் முகாமில் யானை பராமரிப்பாளர்களாக இருப்பவர்கள் பெல்லி- பொம்மன் தம்பதி. இவர்கள் காட்டு நாய்க்கர் எனும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள். இவர்களிடம் தாயை பிரிந்த ரகு, அம்மு எனும் இரு
- “சர்பிரைஸ்”.. பிராமணரை ராஜஸ்தான் தலைவராக்கிய பாஜக! தேர்தலுக்கு இன்னும் 8 மாசம்தான் – பிளான் இதானா?on March 23, 2023 at 1:07 pm
ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் இன்னும் 8 மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அங்கு மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பல்வேறு வியூகங்களை வகுத்து வரும் பாரதிய ஜனதா கட்சி, அம்மாநிலத்தின் புதிய தலைவராக சந்திர பிரகாஷ் ஜோஷியை நியமித்து உள்ளது. ராஜஸ்தான் மாநில பாஜக தலைவராக சதீஷ் பூனியா பதவி வகித்து வந்த நிலையில், சிட்டூர்கர்
- வரதட்சணைதான் கொடுக்கிறோமே.. மகளுக்கு பரம்பரை சொத்தில் உரிமை உள்ளதா? மும்பை ஹைகோர்ட் முக்கிய தீர்ப்புon March 23, 2023 at 11:44 am
கோவா: திருமணத்தின் போது மகளுக்கு வரதட்சணை வழங்கப்பட்டால் குடும்பச் சொத்தில் மகளுக்கு உரிமை இருக்கிறதா என்பது குறித்து மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை அளித்துள்ளது. மும்பை உயர் நீதிமன்ற கோவா கிளையில் குடும்ப சொத்தில் மகளுக்குப் பங்கு தருவது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. நான்கு சகோதரிகள் மற்றும் நான்கு சகோதரர்கள்
- தொடர்ந்து முடங்கும் நாடாளுமன்றம்.. ராஜ்யசபா நாள் முழுக்க ஒத்திவைப்பு.. லோக்சபா 6 மணிக்கு கூடுகிறது!on March 23, 2023 at 11:40 am
டெல்லி: நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வில் 8ஆம் நாள் இன்று கூடிய நிலையில், இன்றும் அவை நடவடிக்கை முடங்கியது. கடந்த ஒரு வாரமாகவே ராகுல் காந்தி லண்டன் பேச்சு, அதானி விவகாரங்கள் காரணமாக அவை முடங்கி வருவது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜன.21ஆம் தேதி தொடங்கியது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன்
- ஒரே நாளில் மாறிய வாழ்க்கை, கடனாவாவது வச்சுக்கோ..அதிர்ஷ்டத்தை கையில் திணித்த தேவதை.. சூப்பர் ஜாக்பாட்on March 23, 2023 at 11:36 am
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் கடனுக்கு வாங்கிய லாட்டரிக்கு ரூ.75 லட்சம் பரிசு விழுந்துள்ளது.. சுமை தூக்கும் தொழிலாளியை தேடி அதிர்ஷ்டம் வந்துள்ளது. இதனால் அவர் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போனார். வாழ்க்கையில் அதிர்ஷ்டம் யாருக்கு வரும், எப்படி வரும்னு யாருக்குமே தெரியாது. ஆனால் ரஜினி படத்தில் சொல்வது போல் வரவேண்டிய நேரத்தில் கரெக்டாக வரும். எல்லாருக்குமே வாழ்க்கையில் ஜெயிக்க நல்ல
- அதானி ஓவர்.. ஹிண்டன்பர்க் அடுத்து வெளியிடும் புது ரிப்போர்ட்! எந்த நிறுவனம் தெரியுமா! பரபர தகவல்on March 23, 2023 at 11:33 am
டெல்லி: அதானி நிறுவனம் குறித்து ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கை மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு முக்கிய ஆய்வறிக்கை வெளியாகவுள்ளது. குஜராத்தைச் சேர்ந்து முக்கிய தொழிலதிபர் கவுதம் அதானி.. இவர் மின்சாரம், ஏர்போர்ட், துறைமுகம் என்று பல்வேறு துறைகளில் பல நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவரது வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளாக மின்னல் வேகத்தில்
- பாஜக மாநில நிர்வாகி சிவந்தி நாராயணன் கோவில்பட்டி வீட்டில் அமலாக்கப் பிரிவு அதிரடி ரெய்டு!on March 23, 2023 at 8:30 am
கோவில்பட்டி: தமிழ்நாடு பாஜகவின் மாநில பட்டியல் அணி பிரிவு பொதுச்செயலாளர் சிவந்தி நாராயணன் வீட்டில் இன்று அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் திடீரென சோதனை நடத்திய்து பரபரப்பை ஏற்படுத்தியது. மத்திய விசாரணை ஏஜென்சிகளான அமலாக்கப் பிரிவு, வருமான வரித்துறை, சிபிஐ உள்ளிட்டவற்றை தங்களை பழிவாங்க மத்திய பாஜக அரசு பயன்படுத்துகிறது என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள்
- ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா..தமிழ்நாடு சட்டசபையில் மீண்டும் ஏகமனதாக நிறைவேறியதுon March 23, 2023 at 6:44 am
சென்னை: பல உயிர்களை குடித்துள்ளது ஆன்லைன் ரம்மி. மனித உயிர்களை காக்க சட்டசபையில் ஆன்லைன் தடை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய நிலையில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதாவை மீண்டும் இன்று சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆன்லைன்
- “மோடி” சாதி.. ராகுல் காந்தி சொன்ன “வார்த்தை”! 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஜாமீன் தந்த நீதிமன்றம்on March 23, 2023 at 6:26 am
காந்திநகர்: கடந்த 2019 ஆம் ஆண்டு மோடி சாதிப்பெயர் குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உரையாற்றியது தொடர்பாக சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த அவதூறு வழக்கில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உடனே ஜாமீனும் வழங்கப்பட்டு இருக்கிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலம் கோலாரில்
- சென்னை கோவை இடையே வந்தாச்சு வந்தே பாரத் ரயில்.. எப்போது தொடங்கும்! பயண நேரம் எவ்வளவு! முழு விவரம்on March 23, 2023 at 5:27 am
சென்னை: தலைநகர் சென்னைக்கும் கோவைக்கும் இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இதை பிரதமர் மோடி அடுத்த மாதம் தொடங்கி வைக்க உள்ளார். உலகிலேயே மிக பெரிய ரயில் நெட்வொர்க்குகளில் ஒன்றாக இந்திய ரயில்வே இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய ரயில்வே பல நவீன மற்றும் புதுமையான தொழில்நுட்பங்களில் முதலீடு செய்து வருகிறது.
- வாய்ச்சொல் வீரம்.. திமுக அரசால் தமிழ்நாட்டின் தள்ளாட்டத்தை நிறுத்தமுடியாது.. லிஸ்ட் போட்ட அண்ணாமலை!on March 23, 2023 at 4:55 am
சென்னை : கண்களுக்கு மட்டும் விருந்தாகும் கானல் நீர் போல, அறிவிப்பு தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த கண்காட்சி பட்ஜெட்டால் தமிழ்நாட்டிற்கு எந்த பயனும் இல்லை. இரண்டரை ஆண்டு கால திமுக ஆட்சி, கடன் சுமையை மேலும் அதிகரித்து சாதனை படைத்திருக்கிறது. நாடகம் போட்டு வாய்ச்சொல் வீரம் காட்டுவதன் மூலம், தமிழ்நாட்டின் தள்ளாட்டத்தை நிறுத்த முடியாது என பாஜக
- பிள்ளைகளுக்கு செல்லம் கொடுக்கலாம்.. அதுக்குன்னு இதெல்லாம் ரொம்ப ஓவர்! அரசுப் பள்ளி ஆசிரியை ஆதங்கம்!on March 23, 2023 at 4:45 am
சென்னை: ஆசிரியர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கிறார் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியையும், கல்வியாளருமான உமா மகேஸ்வரி. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அரசுப் பள்ளி ஆசிரியரை பள்ளிக்குள் புகுந்து பெற்றோர் தாக்குதல் நடத்திய விவகாரம் ஆசிரிய சமுதாயத்தினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர்களை கண்டாலே மாணவர்கள் பயந்து நடுங்கிய காலம் மலையேறி
- போச்சு.. சுங்க கட்டணம் ரூ.55 உயர்வு.. அடிக்கடி ஏன் இப்படி.. அப்ப காய்கறி விலை உயருமே: டிடிவி தினகரன்on March 23, 2023 at 4:23 am
சென்னை: சுங்ககட்டணம் 55 ரூபாய் வரை உயர்த்த இருப்பதால் காய்கறி மற்றும் உணவு பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அச்சம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 55 சுங்கச்சாவடிகளில், 29 சுங்கச்சாவடிகளில் வரும் 1ம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.5 முதல் ரூ.55 வரை கட்டணம் உயர்த்தப்படுவது வாகன ஓட்டிகளை
- மந்தைவெளி மேற்கு வட்ட சாலைக்கு டி.எம்.சவுந்தரராஜன் பெயர்..அரசாணை வெளியிட்ட முதல்வருக்கு நன்றிon March 23, 2023 at 4:01 am
சென்னை: தமிழ்த் திரையுலகின பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் நூற்றாண்டு விழாவை ஒட்டி, அவர் வாழ்ந்த வீடு அமைந்த சென்னை மந்தவெளி மேற்கு வட்டச் சாலைக்கு ‘டி.எம்.சவுந்தரராஜன் சாலை’ என்ற பெயரை முதல்வர் மு.க.ஸ்டாலின் சூட்டுகிறார். இது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில் முதல்வருக்கு டி.எம்.சவுந்தரராஜன் மகன் நன்றி தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகின் தலைசிறந்த பின்னணி பாடகர்
- இதுதான் எழுச்சி.. 7ம் ஆண்டில் நுழையும் உ.பி. பாஜக.. பெண்கள் பைக் பேரணியை தொடங்கி வைத்து பூரித்த யோகிon March 23, 2023 at 3:47 am
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி அமைத்து 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இதனை கொண்டாடும் விதமாக பெண்கள் பைக் பேரணி அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொடக்கி வைத்திருக்கிறார். உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்று நேற்றுடன்(மார்ச் 22) 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதற்கு முன்னர் இருந்த முதலமைச்சர்கள் இவரை
- \”இயேசு\”.. மெயின் கருணாநிதி.. எங்க வீட்டு பெண்ணுக்கு உரிமைதொகை தகுதி நிர்ணயிக்க நீ யார்? சீறிய சீமான்on March 23, 2023 at 3:42 am
சென்னை: பிஷப்புகள் சர்ச்களுக்கு செல்வதில்லை.. கருணாநிதி வீட்டில்தான் குடியிருக்கிறார்கள். அந்த இடத்தை விட்டு அவர்கள் நகர்வதே கிடையாது.. ஜமாத்துகளும் அப்படித் தான். கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் கருணாநிதி செய்த ஏதாவது ஒரே ஒரு நன்மையை சொல்லுங்க பார்ப்போம் என்று நாம் தமிழர் கட்சி சீமான் கேள்வி எழுப்பியிருக்கிறார். சீமானை பொறுத்தவரை, வெற்றி தோல்வி பற்றியெல்லாம் கவலைப்படாமல், எந்த ஒரு
- 100 \”லட்சிய\” தொகுதிகள்.. தலைகீழாக மாறப்போகும் உத்தரபிரதேசம்..அதிரடி திட்டத்தை அறிவித்த முதல்வர் யோகிon March 23, 2023 at 3:27 am
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் குறிப்பிட்ட 100 தொகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு மற்றும் சுகாதார வசதிகள் போன்றவற்றை மேம்படுத்திட முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் இந்த தொகுதிகளை மாநிலத்தின் மற்ற தொகுதிகளுக்கு முன் மாதிரியாக மாற்றுவதே இதன் திட்டமாகும். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் தொடங்க உள்ள நிலையில், உத்தரப் பிரதேசத்தில் உள்ள மொத்த தொகுதிகளையும்
- தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, அண்ணாமலை டெல்லி பயணம்..காரணம் என்ன?on March 23, 2023 at 3:01 am
சென்னை: தமிழக அரசியல் களம் பரபரப்பாக உள்ள இந்த சூழ்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி செல்கிறார். அதிமுக பாஜக இடையே கூட்டணியில் உரசல் நிலவும் நிலையில் மாநிலத்தலைவர் அண்ணாமலையும் இன்று டெல்லி செல்வது பரபரப்பை அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் ஆளுநர் ரவி சட்டசபை மரபுப்படி உரை நிகழ்த்தி 2023ஆம் ஆண்டுக்கான சட்டசபை கூட்டத்தொடரை தொடக்கி
- ஜவுளித்துறையுடன் தமிழ்நாட்டிற்கு நெருங்கிய தொடர்பு..ஜவுளி பூங்கா பற்றி பிரதமர் மோடி தமிழில் ட்வீட்on March 23, 2023 at 2:35 am
டெல்லி: பிரதமரின் மெகா ஜவுளிப் பூங்கா, உலக அளவிலான செயற்கை இழை மற்றும் ஜவுளித் தொழில்நுட்ப சந்தையில் தமிழ்நாடு அதிக பங்கைப் பெற உதவும் என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் ஜவுளிக்கான சர்வதேச மையமாக மாறுவதற்கான இந்தியாவின் முயற்சிகளை ஊக்குவிக்கும் எனவும் பதிவிட்டுள்ளார். தமிழ்நாடு ஜவுளித்துறையுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது
- நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த.. 12 புதுக்கோட்டை மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை!on March 23, 2023 at 1:59 am
சென்னை: நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் போது பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். வானிலை காரணமாக எதிர்கொள்ளும் சிக்கல்கள் ஒரு பக்கம் என்றால் இலங்கை கடற்படையினர் மற்றொரு பக்கம் சிக்கலாக உள்ளனர்.
- தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா..83 பேர் பாதிப்பு..லாக்டவுன் மீண்டும் வருமா?on March 23, 2023 at 1:53 am
சென்னை: தமிழ்நாட்டில் இன்று ஒரு நாள் கொரோனா பாதிப்பு 83ஆக பதிவாகி உள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 480 பேர் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் லாக்டவுன் குறித்த அறிவிப்பு வெளியாகுமா என்ற அச்சம் எழுந்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான
- சர்ச்சில் கேமரா.. பெண்களை படம்பிடித்து மார்பிங் செய்து பாலியல் உறவுக்கு அழைத்த போதகர்.. ஷாக் தகவல்on March 22, 2023 at 5:04 pm
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் சர்ச்க்கு வரும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மதபோதகர் ஸ்டான்லி குமார் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையல் தான் அவர் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சர்ச்சில் சுழல் கேமராவில் பெண்களை படம்பிடித்து அதனை மார்பிங் செய்து பாலியல் இச்சைக்கு பெண்களை அழைத்து மிரட்டியது அதிர வைத்துள்ளது. கன்னியாகுமரி
- அண்ணாச்சி போட்ட மாஸ்டர் பிளான்! திமுகவில் இணைந்த அதிமுக நகராட்சி சேர்மன்! என்ன பின்னணி?on March 22, 2023 at 1:12 pm
தென்காசி: தென்காசி மாவட்டம் செங்கோட்டை அதிமுக நகர்மன்றத் தலைவர் ராமலட்சுமி முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்திருக்கிறார். இதன் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன். நகராட்சி சேர்மனை திமுக பக்கம் செல்லவிடாமல் அதிமுக தரப்பில் பல்வேறு கட்ட முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போதும் அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது.
- எதையும் எதிர்பார்க்க கூடாது.. எல்லாவற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும்.. அர்ஷ்தீப் சொன்ன தத்துவம்!on March 22, 2023 at 12:20 pm
மொஹாலி: எதையும் எதிர்பார்க்காமல் எல்லாவற்றுக்கும் தயாராக இருப்பதே எனது வாழ்க்கை மந்திரம் என்று பஞ்சாப் அணியின் நட்சத்திர வீரர் அர்ஷ்தீப் சிங் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில், சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கிண்டல்களும், கேலிகளும் தொடங்கியுள்ளன. வழக்கம் போல் பஞ்சாப் அணிதான் அதிகமாக கிண்டல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இம்முறை
- இதென்ன அதிசயம்! பிரதமர் மோடிக்கு நன்றி கூறி பேனர் வைத்த திமுக கிளைச் செயலாளர்! பெரம்பலூர் பஞ்சாயத்துon March 22, 2023 at 10:58 am
பெரம்பலூர்: பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து திமுக கிளைச் செயலாளர் ஒருவர் விளம்பர பேனர் வைத்துள்ள நிகழ்வு பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. பிரதமர் மோடி படம் மட்டுமல்ல கூடவே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை படத்தையும் அந்த பேனரில் போட்டு நன்றி கூறியிருக்கிறார் திமுக கிளைச் செயலாளர். இவருக்கு என்ன தான் ஆச்சு என அந்த கிளைக்கழக
- மேகாலயா சட்டசபையில் வெடித்த இந்தி எதிர்ப்பு போராட்டம்- ஆளுநரின் இந்தி உரைக்கு எதிராக வெளிநடப்பு!on March 22, 2023 at 8:44 am
ஷில்லாங்: மேகாலயா சட்டசபையில் இந்தி மொழியில் ஆளுநர் பாகு சவுகாரன் உரை வாசிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து 4 எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேகாலயா சட்டசபை தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனையடுத்து அதிக இடங்களைப் பெற்ற என்பிபி தலைமையில் பாஜக, சுயேட்சைகள் மற்றும் மாநில கட்சிகளை
- கருணாநிதி நூற்றாண்டு விழா! இந்தியாவே திரும்பிப் பார்க்கணும்! 1 ஆண்டு திமுக நான் ஸ்டாப் கொண்டாட்டம்!on March 22, 2023 at 7:41 am
சென்னை: இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாட திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஜூன் 3 2023 முதல் ஜூன் 3 2024 வரை தொண்டர்களின் இல்ல விழாவாக – மக்கள் விழாவாக – கொள்கை விழாவாக கொண்டாட வேண்டும் என மாவட்டச்